Sunday, December 13, 2009

அதிகாரம் 050_இடனறிதல் _குறள் 493

அதிகாரம் 050
இடனறிதல்
குறள் 493ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.


தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும் காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றி கிட்டும்.
493
E'en weak ones mightily prevail, if place of strong defence,
They find, protect themselves, and work their foes offence.


Even the powerless will become powerful and conquer, if they select a proper field (of action), and guard themselves, while they make war on their enemies.


----

அதிகாரம் 050_இடனறிதல் _குறள் 491

அதிகாரம் 50 இடனறிதல்

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது.


ஈ.டுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்.
2.1.12. Knowing the Place
491
Begin no work of war, depise no foe,
Till place where you can wholly circumvent you know.


Let not (a king) despise (an enemy), nor undertake any thing (against him), until he has obtained (a suitable) place for besieging him.

அதிகாரம் 049_காலமறிதல்_குறள் 490

அதிகாரம் 049
காலமறிதல்
குறள் 490கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.


காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்.
490
As heron stands with folded wing, so wait in waiting hour;
As heron snaps its prey, when fortune smiles, put forth your power.


At the time when one should use self-control, let him restrain himself like a heron; and, let him like it, strike, when there is a favourable opportunity.

அதிகாரம் 049_காலமறிதல்_குறள் 489

அதிகாரம் 049
காலமறிதல்
குறள் 489எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.


கிடைப்பதற்கு அரிய காலம் வாயக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்.
2.1.11. Knowing the fitting Time

489
When hardest gain of opportunity at last is won,
With promptitude let hardest deed be done.

If a rare opportunity occurs, while it lasts, let a man do that which is rarely to be accomplished (but for such an opportunity).
----

அதிகாரம் 049_காலமறிதல்_குறள் 488அதிகாரம் 049
காலமறிதல்
குறள் 488செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.


பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்.

If foes' detested form they see, with patience let them bear;
When fateful hour at last they spy,- the head lies there.


If one meets his enemy, let him show him all respect, until the time for his destruction is come; when that is come, his head will be easily brought low.


---------

Saturday, December 5, 2009

அதிகாரம் 049_காலமறிதல்_குறள் 482

அதிகாரம் 49

காலமறிதல்

482

பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.


காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.

482
The bond binds fortune fast is ordered effort made,
Strictly observant still of favouring season's aid.


Acting at the right season, is a cord that will immoveably bind success (to a king).

----

அதிகாரம் 049_காலமறிதல்_குறள் 483அதிகாரம் 049
காலமறிதல்
குறள் 483


அருவினை யென்ப உளவோ கருவியாற்
கால மறிந்து செயின்.


தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.


483

Can any work be hard in very fact,
If men use fitting means in timely act?


Is there anything dificult for him to do, who acts, with (the right) instruments at the right time ?


----

Tuesday, December 1, 2009

அதிகாரம் 049_காலமறிதல்_குறள் 481

அதிகாரம் 49

2.1.11 காலமறிதல்

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.


பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கை வென்று விடும். எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

2.1.11. Knowing the fitting Time


481
A crow will conquer owl in broad daylight;
The king that foes would crush, needs fitting time to fight.


A crow will overcome an owl in the day time; so the king who would conquer his enemy must have (a suitable) time.

---

Monday, November 30, 2009

467_தெரிந்துசெயல்வகை


2.1.9 தெரிந்துசெயல்வகை


எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.

467
Think, and then dare the deed! Who cry,
'Deed dared, we'll think,' disgraced shall be.


Consider, and then undertake a matter; after having undertaken it, to say "We will consider,"
---------

Sunday, November 29, 2009

470_தெரிந்துசெயல்வகை

470_தெரிந்துசெயல்வகை

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.

தம்முடைய நிலைமைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்டமாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திடல் வேண்டும்.


Plan and perform no work that others may despise;
What misbeseems a king the world will not approve as wise.


Let a man reflect, and do things which bring no reproach; the world will not approve, with him, of things which do not become of his position to adopt.

Sunday, November 8, 2009

461_தெரிந்துசெயல்வகை

2.1.9 தெரிந்துசெயல்வகை

461.
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.


எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும்.

2.1.9. Acting after due Consideration

461
Expenditure, return, and profit of the deed
In time to come; weigh these- than to the act proceed.

Let a man reflect on what will be lost, what will be acquired and (from these) what will be his ultimate gain, and (then, let him) act.---

Saturday, November 7, 2009

459_சிற்றினஞ்சேராமை

2.1.8 சிற்றினஞ்சேராமை

459.

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.


நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும்.


Although to mental goodness joys of other life belong,
Yet good companionship is confirmation strong.

Future bliss is (the result) of goodness of mind; and even this acquires strength from the society of the good.

458_சிற்றினஞ்சேராமை

458_சிற்றினஞ்சேராமை

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.


மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை வந்து வாய்க்கும்.To perfect men, though minds right good belong,
Yet good companionship is confirmation strong.

Although they may have great (natural) goodness of mind, yet good society will tend to strengthen it.

----

457_சிற்றினஞ்சேராமை

சிற்றினஞ்சேராமை

457.

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.


மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும்.


Goodness of mind to lives of men increaseth gain;
And good companionship doth all of praise obtain.

Goodness of mind will give wealth, and good society will bring with it all praise, to men.

---

Wednesday, October 28, 2009

452_சிற்றினஞ்சேராமை

2.1.8 சிற்றினஞ்சேராமை

452.

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.


சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்.

Avoiding mean Associations

The waters' virtues change with soil through which they flow;
As man's companionship so will his wisdom show.


As water changes (its nature), from the nature of the soil (in which it flows), so will the character of men resemble that of their associates.

-----

Sunday, October 25, 2009

449_பெரியாரைத் துணைக்கோடல்

449_பெரியாரைத் துணைக்கோடல்

முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.


கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்.

2.1.7 Seeking the Aid of Great Men

Who owns no principal, can have no gain of usury; Who lacks support of friends, knows no stability.

There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanence to those who are without the support of adherents.

438_குற்றங்கடிதல்

2.1.6 குற்றங்கடிதல்

438
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.


எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈ.யாமல் வாழ்வதுதான்.

438

The greed of soul that avarice men call,
When faults are summed, is worst of all.


Griping avarice is not to be reckoned as one among other faults; (it stands alone - greater than all).

----

432_குற்றங்கடிதல்

2.1.6 குற்றங்கடிதல்


432

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.


மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்.

2.1.6 The Correction of Faults

432

A niggard hand, o'erweening self-regard, and mirth
Unseemly, bring disgrace to men of kingly brith.


Avarice, undignified pride, and low pleasures are faults in a king.

----

Monday, October 12, 2009

430_அறிவுடைமை

430.

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை.
The wise is rich, with ev'ry blessing blest;
The fool is poor, of everything possessed.


Those who possess wisdom, possess every thing; those who have not wisdom, whatever they may possess, have nothing.

----

428_அறிவுடைமை

2.1.5 அறிவுடைமை

428
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.


அறிவில்லாதவர்கள் தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள்.
அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்.
Fear the frightful and act wisely
Not to fear the frightful's folly.

----------

429_அறிவுடைமை

2.1.5 அறிவுடைமை

429.
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.


வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.
The wise with watchful soul who coming ills foresee;
From coming evil's dreaded shock are free.


No terrifying calamity will happen to the wise, who (foresee) and guard against coming evils.

-----

Sunday, October 11, 2009

427_அறிவுடைமை

அறிவுடைமை_427

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர். 427


ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.----

Thursday, October 8, 2009

426_அறிவுடைமை

2.1.5 அறிவுடைமை


எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.
As dwells the world, so with the world to dwell In harmony- this is to wisely live and well. To live as the world lives, is wisdom.

---

Sunday, September 27, 2009

412_திருக்குறள்_அரசியல்_கேள்வி

412_திருக்குறள்_அரசியல்_கேள்விசெவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
412


செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்.
When 'tis no longer time the listening ear to feed
With trifling dole of food supply the body's need.

When there is no food for the ear, give a little also to the stomach.


Verse 412 Only when no nourishment exists for the ear Is it time to offer the stomach a morsel.

------------------------

Saturday, September 26, 2009

411_திருக்குறள்_அரசியல்_கேள்வி

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்

411_திருக்குறள்_அரசியல்_கேள்வி

2. பொருட்பால்
2.1 அரசியல்
2.1.4 கேள்வி


செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.


செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்.

Wealth of wealth is wealth acquired be ear attent;
Wealth mid all wealth supremely excellent.

Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chi ef of all wealth.


----

551_திருக்குறள்_அரசியல்_கொடுங்கோன்மை

551_திருக்குறள்_அரசியல்_கொடுங்கோன்மை

2.1.18 கொடுங்கோன்மை - Cruel Tyranny

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.


ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.
Than one who plies the murderer's trade, more cruel is the king
Who all injustice works, his subjects harassing.

The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruel than the man who leads the life of a murderer.

This Thirukkural shows the current events in the island of Srilanka where a Cruel Genocide is happening.

26OCT09
----

Friday, September 25, 2009

407_திருக்குறள்_அரசியல்_கல்லாமை

407_திருக்குறள்_அரசியல்_கல்லாமை


நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.


2.1.3 Ignorance / Non-Learning
Kural 407

Who lack the power of subtle, large, and penetrating sense,
Like puppet, decked with ornaments of clay, their beauty's vain pretence.

The beauty and goodness of one who is destitute of knowledge by the study of great and exquisite works, is like (the beauty and goodness) of a painted earthen doll.

----

Thursday, September 24, 2009

406_திருக்குறள்_அரசியல்_கல்லாமை

406_திருக்குறள்_அரசியல்_கல்லாமை

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்

2.1.3 கல்லாமை


உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது. காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்.

'They are': so much is true of men untaught;
But, like a barren field, they yield us nought!

The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they exist.

Sunday, September 13, 2009

405_திருக்குறள்_அரசியல்_கல்லாமை

405_திருக்குறள்_அரசியல்_கல்லாமை


கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.

கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.

-----

404_திருக்குறள்_அரசியல்_கல்லாமை

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்

2.1.3 கல்லாமை

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.


கல்லாதவனது அறிவு சில சமயங்களிலே மிகவும் நன்றாயிருந்தாலும் , அறிவுடையவர்கள் அதனை நன்றென்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் .From blockheads' lips, when words of wisdom glibly flow,
The wise receive them not, though good they seem to show.

Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge.


From blockheads' lips, when words of wisdom glibly flow,
The wise receive them not, though good they seem to show.


Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge.

402_திருக்குறள்_அரசியல்_கல்லாமை

402_திருக்குறள்_அரசியல்_கல்லாமை


கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.கல்லாதவன் தானும் அவையிற் பேசவேண்டும் என்று விரும்புதல், முலைகளிரண்டும் இல்லாத பெண் பெண்மையை விரும்புதல் போன்ற அறியாமை ஆகும் .


Like those who doat on hoyden's undeveloped charms are they,
Of learning void, who eagerly their power of words display.

The desire of the unlearned to speak (in an assembly), is like a woman without breasts desiring (the enjoyment of ) woman-hood.

Saturday, September 5, 2009

401_திருக்குறள்_அரசியல்_கல்லாமை

401_திருக்குறள்_அரசியல்_கல்லாமை

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்

2. பொருட்பால்
2.1 அரசியல்
2.1.3 கல்லாமை


குறள் 401

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.நிரம்பிய நூலறிவு இல்லாமல் கற்றவர் அவையில சென்று ஒருவன் பேசுதல் ,
"அரங்கம் இழைக்காமலே வட்டடினால்" போன்ற அறியாமையான செயல் ஆகும்.
PART II. WEALTH
2.1 Royalty
2.1.3 Ignorance

Kural 401

Like those at draughts would play without the chequered square,
Men void of ample lore would counsels of the learned share.

To speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on a board) without squares.

Thursday, September 3, 2009

400_திருக்குறள்_அரசியல்_கல்வி

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்

400_திருக்குறள்_அரசியல்_கல்வி

2. பொருட்பால்
2.1 அரசியல்
2.1.2 கல்வி


400


கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.


கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.

English Translation :
(by Rev Dr G U Pope, Rev W H Drew, Rev John Lazarus and Mr F W Ellis )

Learning is excellence of wealth that none destroy;
To man nought else affords reality of joy.

Learning is the true imperishable riches; all other things are not riches.

----

Tuesday, September 1, 2009

397_திருக்குறள்_அரசியல்_கல்வி

397_திருக்குறள்_அரசியல்_கல்வி


397

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ?

* TubeTamil


----

Monday, August 24, 2009

395_திருக்குறள்_அரசியல்_கல்வி

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்


395_திருக்குறள்_அரசியல்_கல்வி

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.


அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும் கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக் கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராக கருதப்படுவார்கள்.

Sunday, August 23, 2009

394_திருக்குறள்_அரசியல்_கல்வி

394_திருக்குறள்_அரசியல்_கல்வி


உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.


மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும்.
---

Saturday, August 22, 2009

393_திருக்குறள்_அரசியல்_கல்வி

393_திருக்குறள்_அரசியல்_கல்வி

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்

2. பொருட்பால்
2.1 அரசியல்
2.1.2 கல்வி


393
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.---

Friday, August 21, 2009

392_திருக்குறள்_அரசியல்_கல்வி

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்

392_திருக்குறள்_அரசியல்_கல்வி

2. பொருட்பால்
2.1 அரசியல்
2.1.2 கல்வி

392.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
.....

Thursday, August 20, 2009

386_திருக்குறள்_அரசியல்_இறைமாட்சி

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்

2. பொருட்பால்
2.1 அரசியல்
2.1.1 இறைமாட்சி

# 386

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.


காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்.....

Wednesday, August 19, 2009

385_திருக்குறள்_பொருட்பால்_அரசியல்_இறைமாட்சி

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்

திருக்குறள்_385_பொருட்பால்_அரசியல்_இறைமாட்சி

2. பொருட்பால்
2.1 அரசியல்
2.1.1 இறைமாட்சி

குறள் 385.

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.


முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.
TubeTamil இணையத்திலும் காணலாம்.


...

Tuesday, August 18, 2009

360_திருக்குறள்_அறத்துப்பால் _துறவறவியல்_மெய்யுணர்தல்

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்

திருக்குறள்_360_அறத்துப்பால்_துறவறவியல்_மெய்யுணர்தல்

1. அறத்துப்பால்

1.3 துறவறவியல்

1.3.12 மெய்யுணர்தல்

குறள் 360.

காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.

TubeTamil
.


...

Monday, August 17, 2009

359_திருக்குறள்_அறத்துப்பால் _துறவறவியல்_மெய்யுணர்தல்

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்

1. அறத்துப்பால்

1.3 துறவறவியல்

1.3.12 மெய்யுணர்தல்

359.


சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.
---

Sunday, August 16, 2009

381_திருக்குறள்_பொருட்பால்_அரசியல்_ இறைமாட்சி

381_திருக்குறள்_பொருட்பால்_அரசியல்_இறைமாட்சி

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்


16-ஆகஸ்ட்-2009 அன்று " மக்கள் தொலைக்காட்சியில்" "கலைமாமணி" "திரு. சுப்பு ஆறுமுகம் குழுவினர் வழங்கிய "வில்லும் சொல்லும்" நிகழ்ச்சி

2.பொருட்பால்

2.1 அரசியல் > 2.1.1. இறைமாட்சி

குறள் # 381 Thirukkural


படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.
--

Friday, August 14, 2009

380_திருக்குறள்_ஊழியல்_ஊழ்

380_திருக்குறள்_ஊழியல்_ஊழ்

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்


14-ஆகஸ்ட்-2009 அன்று " மக்கள் தொலைக்காட்சியில்" "கலைமாமணி" "திரு. சுப்பு ஆறுமுகம் குழுவினர் வழங்கிய "வில்லும் சொல்லும்" நிகழ்ச்சி

1.அறத்துப்பால்

1.4 ஊழியல் > 1.4.1. ஊழ்

குறள் # 380 Thirukkural

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.

see it also in OruTube.

---

Wednesday, August 12, 2009

375_திருக்குறள்_ஊழியல்_ஊழ்

375_திருக்குறள்_ஊழியல்_ஊழ்

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்


12-ஆகஸ்ட்-2009 அன்று " மக்கள் தொலைக்காட்சியில்" "கலைமாமணி" "திரு. சுப்பு ஆறுமுகம் குழுவினர் வழங்கிய "வில்லும் சொல்லும்" நிகழ்ச்சி

1.அறத்துப்பால்

1.4 ஊழியல் > 1.4.1. ஊழ்


குறள் # 375
Thirukkural

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.
TubeTamil--

Monday, August 10, 2009

540_திருக்குறள்_பொருட்பால்_அரசியல்_பொச்சாவாமை

2. பொருட்பால்
2.1 அரசியல்
2.1.16 பொச்சாவாமை


540

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.
--

Saturday, August 8, 2009

371_திருக்குறள்_ஊழியல்_ஊழ்

08-ஆகஸ்ட்-2009 அன்று " மக்கள் தொலைக்காட்சியில்" "கலைமாமணி" திரு. சுப்பு ஆறுமுகம் குழுவினர் " வழங்கிய வில்லும் சொல்லும்" நிகழ்ச்சி

1. அறத்துப்பால்
1.4 ஊழியல் > 1.4.1. ஊழ்

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.

===

Thursday, August 6, 2009

370_திருக்குறள்_அவாவறுத்தல்

370_திருக்குறள்_அவாவறுத்தல்


06-ஆகஸ்ட்-2009 அன்று " மக்கள் தொலைக்காட்சியில்" "கலைமாமணி" திரு. சுப்பு ஆறுமுகம் குழுவினர் " வழங்கிய
வில்லும் சொல்லும்" நிகழ்ச்சி :

1. அறத்துப்பால்
1.3 துறவறவியல்
1.3.13 அவாவறுத்தல் 370

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.


--

Wednesday, August 5, 2009

369_திருக்குறள்_அவாவறுத்தல்

369_திருக்குறள்_அவாவறுத்தல்


05-ஆகஸ்ட்-2009 அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சி :

1. அறத்துப்பால்
1.3 துறவறவியல்
1.3.13 அவாவறுத்தல் 369

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.

* TubeTamil இணைய தளத்தில் கூட பார்க்கலாம்.

நன்றி : மக்கள் டிவி.

Tuesday, August 4, 2009

368_திருக்குறள் _அவாவறுத்தல்

Tamil_Thirukkural திருக்குறள்_368_அவாவறுத்தல்_Villum Sollum_04Aug09

04-ஆகஸ்ட்-2009 அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சி :

1. அறத்துப்பால்
1.3 துறவறவியல்
1.3.13 அவாவறுத்தல் 368

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.
* TubeTamil இணைய தளத்தில் கூட பார்க்கலாம்.

நன்றி : மக்கள் டிவி.

.....

Sunday, August 2, 2009

364_திருக்குறள்_வில்லும் சொல்லும்_Makkal TV_02Aug09

உலகப் பொது மறையாக கருதப்படும் திருக்குறள் " மக்கள் தொலைக்காட்சியில்" தினம்தோறும் காலை 06:30 மணிக்கு "நாட்க்காட்டி" என்ற நிகழ்ச்சியில் " வில்லும் சொல்லும்" என்னும் பகுதியாக ஒளிப்பரப்படுகிறது.

தினம் ஒரு திருக்குறள் என்ற அடிப்படையில் குரலில் பொதிந்திருக்கும் பொருள் வில்லிசையல் விளக்கப்படுகிறது.

தென் தமிழகத்தின் தனித்துவமான இசை வடிவமாக கருதப்படும் "வில்லுப்பாட்டு" முலம் குரலின் கருத்துக்கள் வழங்கப்படுகிறது.

வில்லிசையில் புலமை பெற்ற "கலைமாமணி" திரு. சுப்பு ஆறுமுகம் குழுவினர் பொருள் நயம் பொங்க இசை வடிவில் பொழிகிறார்.


நன்றி : மக்கள் டிவி


02-ஆகஸ்ட்-2009 அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சி :

http://www.tamilnation.org/literature/kural/mp001.htm

364.

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.


" TubeTamil " இணைய தளத்தில் கூட பார்க்கலாம்.

------------------------------------------

Tuesday, April 7, 2009

தமிழ் வில்லுப்பாட்டு വില്ലുഅടിച്ചമ്പട്ടു

Tamil Villuppattu - a Traditional Folk Song

தமிழ் வில்லுப்பாட்டு വില്ലുഅടിച്ചമ്പട്ടു !


Villuppattu is a Tamil folk art of story telling where narration is interspersed with music. Simple tunes and simple verses make the story to be followed easily. The villu, a bow, used as a primary instrument, is struck while narrating the story and singing the songs.

In Tamil villages, performers narrate stories ranging from mythological to social. The main storyteller narrates the story striking the bow. The bow rests on a mud pot kept facing downwards. A co-performer beats the pot while singing. There is usually another co-singer who acts as active listener to the narration, uttering appropriate oral responses.


1)


2)

3)4)--------------------------------------------------------------------------------