Sunday, September 27, 2009

412_திருக்குறள்_அரசியல்_கேள்வி

412_திருக்குறள்_அரசியல்_கேள்விசெவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
412


செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்.
When 'tis no longer time the listening ear to feed
With trifling dole of food supply the body's need.

When there is no food for the ear, give a little also to the stomach.


Verse 412 Only when no nourishment exists for the ear Is it time to offer the stomach a morsel.

------------------------

Saturday, September 26, 2009

411_திருக்குறள்_அரசியல்_கேள்வி

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்

411_திருக்குறள்_அரசியல்_கேள்வி

2. பொருட்பால்
2.1 அரசியல்
2.1.4 கேள்வி


செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.


செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்.

Wealth of wealth is wealth acquired be ear attent;
Wealth mid all wealth supremely excellent.

Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chi ef of all wealth.


----

551_திருக்குறள்_அரசியல்_கொடுங்கோன்மை

551_திருக்குறள்_அரசியல்_கொடுங்கோன்மை

2.1.18 கொடுங்கோன்மை - Cruel Tyranny

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.


ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.
Than one who plies the murderer's trade, more cruel is the king
Who all injustice works, his subjects harassing.

The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruel than the man who leads the life of a murderer.

This Thirukkural shows the current events in the island of Srilanka where a Cruel Genocide is happening.

26OCT09
----

Friday, September 25, 2009

407_திருக்குறள்_அரசியல்_கல்லாமை

407_திருக்குறள்_அரசியல்_கல்லாமை


நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.


2.1.3 Ignorance / Non-Learning
Kural 407

Who lack the power of subtle, large, and penetrating sense,
Like puppet, decked with ornaments of clay, their beauty's vain pretence.

The beauty and goodness of one who is destitute of knowledge by the study of great and exquisite works, is like (the beauty and goodness) of a painted earthen doll.

----

Thursday, September 24, 2009

406_திருக்குறள்_அரசியல்_கல்லாமை

406_திருக்குறள்_அரசியல்_கல்லாமை

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்

2.1.3 கல்லாமை


உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது. காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்.

'They are': so much is true of men untaught;
But, like a barren field, they yield us nought!

The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they exist.

Sunday, September 13, 2009

405_திருக்குறள்_அரசியல்_கல்லாமை

405_திருக்குறள்_அரசியல்_கல்லாமை


கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.

கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.

-----

404_திருக்குறள்_அரசியல்_கல்லாமை

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்

2.1.3 கல்லாமை

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.


கல்லாதவனது அறிவு சில சமயங்களிலே மிகவும் நன்றாயிருந்தாலும் , அறிவுடையவர்கள் அதனை நன்றென்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் .From blockheads' lips, when words of wisdom glibly flow,
The wise receive them not, though good they seem to show.

Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge.


From blockheads' lips, when words of wisdom glibly flow,
The wise receive them not, though good they seem to show.


Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge.

402_திருக்குறள்_அரசியல்_கல்லாமை

402_திருக்குறள்_அரசியல்_கல்லாமை


கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.கல்லாதவன் தானும் அவையிற் பேசவேண்டும் என்று விரும்புதல், முலைகளிரண்டும் இல்லாத பெண் பெண்மையை விரும்புதல் போன்ற அறியாமை ஆகும் .


Like those who doat on hoyden's undeveloped charms are they,
Of learning void, who eagerly their power of words display.

The desire of the unlearned to speak (in an assembly), is like a woman without breasts desiring (the enjoyment of ) woman-hood.

Saturday, September 5, 2009

401_திருக்குறள்_அரசியல்_கல்லாமை

401_திருக்குறள்_அரசியல்_கல்லாமை

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்

2. பொருட்பால்
2.1 அரசியல்
2.1.3 கல்லாமை


குறள் 401

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.நிரம்பிய நூலறிவு இல்லாமல் கற்றவர் அவையில சென்று ஒருவன் பேசுதல் ,
"அரங்கம் இழைக்காமலே வட்டடினால்" போன்ற அறியாமையான செயல் ஆகும்.
PART II. WEALTH
2.1 Royalty
2.1.3 Ignorance

Kural 401

Like those at draughts would play without the chequered square,
Men void of ample lore would counsels of the learned share.

To speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on a board) without squares.

Thursday, September 3, 2009

400_திருக்குறள்_அரசியல்_கல்வி

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்

400_திருக்குறள்_அரசியல்_கல்வி

2. பொருட்பால்
2.1 அரசியல்
2.1.2 கல்வி


400


கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.


கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.

English Translation :
(by Rev Dr G U Pope, Rev W H Drew, Rev John Lazarus and Mr F W Ellis )

Learning is excellence of wealth that none destroy;
To man nought else affords reality of joy.

Learning is the true imperishable riches; all other things are not riches.

----

Tuesday, September 1, 2009

397_திருக்குறள்_அரசியல்_கல்வி

397_திருக்குறள்_அரசியல்_கல்வி


397

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ?

* TubeTamil


----