Sunday, December 13, 2009

அதிகாரம் 050_இடனறிதல் _குறள் 493

அதிகாரம் 050
இடனறிதல்
குறள் 493ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.


தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும் காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றி கிட்டும்.
493
E'en weak ones mightily prevail, if place of strong defence,
They find, protect themselves, and work their foes offence.


Even the powerless will become powerful and conquer, if they select a proper field (of action), and guard themselves, while they make war on their enemies.


----

அதிகாரம் 050_இடனறிதல் _குறள் 491

அதிகாரம் 50 இடனறிதல்

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது.


ஈ.டுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்.
2.1.12. Knowing the Place
491
Begin no work of war, depise no foe,
Till place where you can wholly circumvent you know.


Let not (a king) despise (an enemy), nor undertake any thing (against him), until he has obtained (a suitable) place for besieging him.

அதிகாரம் 049_காலமறிதல்_குறள் 490

அதிகாரம் 049
காலமறிதல்
குறள் 490கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.


காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்.
490
As heron stands with folded wing, so wait in waiting hour;
As heron snaps its prey, when fortune smiles, put forth your power.


At the time when one should use self-control, let him restrain himself like a heron; and, let him like it, strike, when there is a favourable opportunity.

அதிகாரம் 049_காலமறிதல்_குறள் 489

அதிகாரம் 049
காலமறிதல்
குறள் 489எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.


கிடைப்பதற்கு அரிய காலம் வாயக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்.
2.1.11. Knowing the fitting Time

489
When hardest gain of opportunity at last is won,
With promptitude let hardest deed be done.

If a rare opportunity occurs, while it lasts, let a man do that which is rarely to be accomplished (but for such an opportunity).
----

அதிகாரம் 049_காலமறிதல்_குறள் 488அதிகாரம் 049
காலமறிதல்
குறள் 488செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.


பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்.

If foes' detested form they see, with patience let them bear;
When fateful hour at last they spy,- the head lies there.


If one meets his enemy, let him show him all respect, until the time for his destruction is come; when that is come, his head will be easily brought low.


---------

Saturday, December 5, 2009

அதிகாரம் 049_காலமறிதல்_குறள் 482

அதிகாரம் 49

காலமறிதல்

482

பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.


காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.

482
The bond binds fortune fast is ordered effort made,
Strictly observant still of favouring season's aid.


Acting at the right season, is a cord that will immoveably bind success (to a king).

----

அதிகாரம் 049_காலமறிதல்_குறள் 483அதிகாரம் 049
காலமறிதல்
குறள் 483


அருவினை யென்ப உளவோ கருவியாற்
கால மறிந்து செயின்.


தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.


483

Can any work be hard in very fact,
If men use fitting means in timely act?


Is there anything dificult for him to do, who acts, with (the right) instruments at the right time ?


----

Tuesday, December 1, 2009

அதிகாரம் 049_காலமறிதல்_குறள் 481

அதிகாரம் 49

2.1.11 காலமறிதல்

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.


பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கை வென்று விடும். எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

2.1.11. Knowing the fitting Time


481
A crow will conquer owl in broad daylight;
The king that foes would crush, needs fitting time to fight.


A crow will overcome an owl in the day time; so the king who would conquer his enemy must have (a suitable) time.

---